தெலுங்கானாவில் வெடிப்பொருள் தொழிற்சாலையில் வெடி விபத்து, 10 பேர் உயிரிழப்பு


தெலுங்கானாவில் வெடிப்பொருள் தொழிற்சாலையில் வெடி விபத்து, 10 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 4 July 2018 8:51 AM GMT (Updated: 4 July 2018 8:51 AM GMT)

தெலுங்கானாவில் வெடிப்பொருள் தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.


ஐதராபாத்,

    தெலுங்கானாவின் வாராங்கால் மாவட்டத்தில் பத்ராகாளி வெடிப்பொருள் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து நேரிட்டது. 

தீ விபத்து நேரிட்டதும் அங்கிருந்த வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க விரைந்தனர். இதற்கிடையே தொழிற்சாலையின் கட்டிடம் வெடித்து சிதறி தரைமட்டம் ஆனது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். அவர்களுடைய சடலம் ஆலை இருந்த பகுதியில் இருந்து 100 அடிக்கு அப்பால் கிடந்தது. காயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் தீ விபத்து நேரிட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவரவில்லை. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தொழிற்சாலையில் எத்தனை பேர் பணியாற்றினர் என்பதும் தெரியவரவில்லை. காயம் அடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story