நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுமா? சுப்பிரமணிய சாமி பதில்


நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுமா? சுப்பிரமணிய சாமி பதில்
x
தினத்தந்தி 4 July 2018 11:00 PM GMT (Updated: 4 July 2018 9:08 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுமா? என்ற ’தந்தி டி.வி.’ நிருபர் கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தல் நடைபெறும் நிலையில், அந்த தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் கட்சிகளிடையே பரவலான கருத்துகள் நிலவி வருகின்றன.

இது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமியிடம் நேற்று டெல்லியில் ‘தந்தி டி.வி.’ நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுமா? என்பது குறித்து எனக்கு ஒன்றும் தெரியவில்லை’ எனக்கூறினார்.

பின்னர், ‘நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது’ குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, ‘ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான் சவுகரியம். ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலோ, கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்கும்பட்சத்தில் கூட்டணி ஆதரவு திரும்ப பெறப்பட்டாலோ அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றாலோ என்ன செய்வது?’ எனக்கேள்வி எழுப்பினார்.

எனவே இதுபோன்ற பல சிக்கல்கள் இருப்பதால், ஒரே நேரத்தில் தேர்தல் வரும் என்று தான் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story