மாணவிகள் உள்ளாடை அணிவதற்கு கலர் கட்டுப்பாடு உத்தரவை ரத்து செய்த பள்ளி


மாணவிகள் உள்ளாடை அணிவதற்கு கலர் கட்டுப்பாடு உத்தரவை ரத்து செய்த பள்ளி
x
தினத்தந்தி 5 July 2018 12:27 PM GMT (Updated: 5 July 2018 12:27 PM GMT)

மாணவிகள் உள்ளாடை அணிவதற்கு கலர் கட்டுப்பாடு விதித்த பள்ளிக்கூடம் அதனை ரத்து செய்து உள்ளது.

புனே

புனேவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறை பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

புனேவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில்  நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி குறிப்பேட்டில் ஒருசில புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த புதிய விதிமுறையில் மாணவிகள் வெள்ளை நிறம் அல்லது பழுப்பு நிற உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், மாணவிகள் கழிவறைக்கு செல்லவும் பள்ளியில் கால நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த புதிய விதிமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி முன் திரண்டு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, மாணவிகளின் பாதுகாப்பு கருதியே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்து இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து அந்த பள்ளி தனது உத்தரவை ரத்து செய்து உள்ளது.

Next Story