துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான தீர்ப்பு டெல்லிக்குத்தான் பொருந்தும் - கிரண் பேடி


துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான தீர்ப்பு டெல்லிக்குத்தான் பொருந்தும் - கிரண் பேடி
x
தினத்தந்தி 5 July 2018 12:28 PM GMT (Updated: 5 July 2018 12:28 PM GMT)

துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான தீர்ப்பு டெல்லிக்குத்தான் பொருந்தும் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார். #KiranBedi

சென்னை,

டெல்லி கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது, அவர் மந்திரிசபை அறிவுரைபடிதான் செயல்பட முடியும் என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்தநிலையில், டெல்லி யூனியன் பிரதேசம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பு, மற்றொரு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு பொருந்துமா? என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் 180-வது பகுதியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அந்த பகுதியில், “புதுச்சேரி யூனியன் பிரதேசமானது அந்தமான் நிகோபார், டாமன் டையூ, தத்ரா நகர் ஹவேலி, லட்சத்தீவு, சண்டிகார் ஆகியவற்றில் இருந்து மாறுபட்டது. என்றாலும் புதுச்சேரியில் அரசியல் சாசனத்தின் 239ஏ பிரிவின் கீழ் ஆட்சி நிர்வாகம் நடைபெறுவதால், டெல்லி யூனியன் பிரதேசத்துடன் அதை ஒப்பிட முடியாது” என்று கூறப்பட்டு உள்ளது. (டெல்லியில் அரசியல் சாசனத்தில் 239ஏஏ பிரிவின் கீழ் ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏக்கள் உண்டு. டெல்லியில் நியமன எம்.எல்.ஏ.க்கள் கிடையாது)

இந்தநிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சென்னையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியார்களிடம் கூறியதாவது:

துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான தீர்ப்பு டெல்லிக்குத்தான் பொருந்தும். புதுச்சேரிக்கு அல்ல. மற்ற யூனியன் பிரதேசங்களுக்கும், புதுச்சேரிக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story