கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ராகுல் காந்தியை கிண்டல் செய்த பா.ஜனதா!


கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ராகுல் காந்தியை கிண்டல் செய்த பா.ஜனதா!
x
தினத்தந்தி 5 July 2018 3:45 PM GMT (Updated: 5 July 2018 3:45 PM GMT)

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் ராகுல் காந்தியை பாரதீய ஜனதா கிண்டல் அடித்துள்ளது.



2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல், மதுபானம், மின்சாரம் மீதான வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி தலா 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு மீது கடும் விமர்சனம் எழுந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தது. பிரதமர் மோடி உடல்பயிற்சி தொடர்பாக வெளியிட்ட ‘பிட்னஸ்’ சவாலுக்கு போட்டியாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘பெட்ரோல்’ சவால் விடுத்தார். 

 இப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகை செய்துள்ளதை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. 

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜனதா,  குமாரசாமி அரசு பதவியேற்றதும் மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளது என விமர்சனம் செய்துள்ளது. 

‘சொந்தக் கட்சியே சொல்படி கேட்டபதில்லையா?’  என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பா.ஜனதா கிண்டல் அடித்துள்ளது.

‘‘ராகுல் காந்தியின் பெட்ரோல் விலை குறைப்பு சவாலை யாருமே ஏற்கவில்லை. கர்நாடகாவில் பதவியிலுள்ள அவர்களுடைய அரசுகூட   சவாலை நிராகரித்துள்ளது. எந்த ஒரு தெளிவான சிந்தனையும் இல்லாமல் மற்றவர்களுக்கு அறிவுரை கூறினால் இப்படி தான் நடக்கும்’’ என்று பா.ஜனதாவின் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story