ஒரு மாதத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு


ஒரு மாதத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு
x
தினத்தந்தி 5 July 2018 10:30 PM GMT (Updated: 5 July 2018 9:44 PM GMT)

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நேற்று பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. அதிலும், கடந்த மாதம் 26-ந் தேதி முதல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தன.

எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பு நாள்தோறும் 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை கூடுதலாக உற்பத்தி செய்ய முடிவு செய்திருந்ததால், சர்வதேச சந்தையில் விலை குறையும் என்று எதிர்பார்த்து விலையில் மாற்றம் செய்யாமல் இருந்தன.

ஆனால், ஈரான் விவகாரத்தால், எண்ணெய் வள நாடுகள் கூட்டமைப்பு அம்முடிவை செயல்படுத்தவில்லை.

இதனால், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நேற்று பெட்ரோல், டீசல் விலைய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகளும், டீசல் விலை 12 காசுகளும் உயர்ந்தன.

Next Story