திருமணமான 4 நாளில் கழுத்தை அறுத்து கணவனை கொலை செய்த மனைவி காரணம் என்ன?


திருமணமான 4 நாளில் கழுத்தை அறுத்து கணவனை கொலை செய்த மனைவி  காரணம் என்ன?
x
தினத்தந்தி 6 July 2018 12:19 PM GMT (Updated: 6 July 2018 12:19 PM GMT)

மிகுந்த தலைவலி காரணமாக திருமணமான 4 நாளில் கணவனை கழுத்தை அறுத்து மனைவி கொலைசெய்து உள்ளார்.

பாட்னா

பீகார் மாநிலம்  முகின்பூர் கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் சிங்கி தேவி (வயது 23)  ரவீந்திர சிங் ( வயது 30) இவர்களுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆகிறது. தேவிக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது.

 கடந்த செவ்வாய்க்கிழமை புதுமண தம்பதிகள் படுக்கை அறைக்குள் சென்றவர்கள் காலை நீண்ட நேரமாகியும் எழுதிருக்கவில்லை. ரவீந்திர சிங்கின் தாயார் பகவதி குன்வார் கதவை தட்டி உள்ளார். 10 நிமிடம் கழித்து கதவை திறந்து  சிங்கி தேவி மட்டும் வந்து உள்ளார்.  பகவதி உள்ளே சென்று பார்த்த போது  ரவீந்திர சிங் ரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

கணவரை கொலை செய்ததாக போலீசார் சிங்கி தேவியை கைது செய்தனர். விசாரணையில்  தான் மிகுந்த தலைவலியில்  இருந்ததால் கணவனை கொலை செய்ததாக கூறி உள்ளார் . தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story