தேசிய செய்திகள்

‘நிர்பயா’ கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு: மறுஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு + "||" + SC To Pronounce Judgment In Nirbhaya Rape And Murder Case Review Petitions On July 9

‘நிர்பயா’ கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு: மறுஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு

‘நிர்பயா’ கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு: மறுஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு
‘நிர்பயா’ கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான மறுஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.
புதுடெல்லி, 

டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஒருவர் (நிர்பயா என்ற கற்பனை பெயர்) 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக்கொல்லப்பட்டார். 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.

மற்ற 4 பேர்களான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. அதை மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது கடந்த மே 4-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நாளை (திங்கட்கிழமை) அந்த மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்கிறது.