”டெல்லி அருகே உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலை” பிரதமர் மோடி துவங்கி வைத்தார்


”டெல்லி அருகே உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலை” பிரதமர் மோடி துவங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 July 2018 1:11 PM GMT (Updated: 9 July 2018 1:13 PM GMT)

டெல்லி அருகே நொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். #PMmodi

நொய்டா, 

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் பிரபல சம்சங் செல்போன் நிறுவனத்தின்  தொழிற்சாலை 35 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையான இதை, பிரதமர் மோடி இன்று துவங்கி வைத்தார். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 120 மில்லியன் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் திறனை கொண்டதாகும். 

நொய்டாவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையை பிரதமர் மோடி மற்றும்  தென்கொரிய அதிபர்  மூன் ஜே இன் ஆகியோர் துவங்கி வைத்தனர். முன்னதாக, மேற்கூறிய செல்போன் தயாரிப்பு  தொழிற்சாலையை திறந்து வைக்க பிரதமர் மோடி மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே ஆகியோர் நொய்டாவுக்கு டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். 

மெட்ரோ ரயிலில் அருகருகே அமர்ந்தபடி இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். பிரதமர் மோடியும் தென்கொரிய அதிபரும் மெட்ரோ ரயிலில் நின்ற பயணிகளுக்கு கை அசைத்தனர். பயணிகளும் பிரதமர் மோடியை, கண்டதும் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 


Next Story