காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு


காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு
x
தினத்தந்தி 10 July 2018 7:02 AM GMT (Updated: 10 July 2018 7:02 AM GMT)

காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க, கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டு உள்ளார். #cauvery #HDKumaraswamy

பெங்களூர்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, பாகமண்டலா, விராஜ்பேட்டை, மடிகேரி, கோணிகொப்பா, சித்தாப்புரா, சுண்டிகொப்பா, சோமவார்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது

இதனால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தமிழகத்திற்கு விநாடிக்கு 35,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த  நிலையில்  ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள்  குளிக்கவும் , பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story