சவுதி அரேபியா, அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்கினால் இந்தியா சலுகைகளை இழக்கும் - ஈரான் தூதர்


சவுதி அரேபியா, அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்கினால் இந்தியா சலுகைகளை இழக்கும் - ஈரான் தூதர்
x
தினத்தந்தி 10 July 2018 4:01 PM GMT (Updated: 10 July 2018 4:01 PM GMT)

சவுதி அரேபியா, அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் இந்தியா சலுகைகளை இழக்கும் என ஈரான் தூதர் கூறியுள்ளார்.


புதுடெல்லி,

பாராளுமன்றத்தில் அனைத்து இந்திய சிறுபான்மையினர் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய ஈரான் தூதர் மசூத் ரெஸ்வானியன் ராகாஹி, 2012 முதல் 2015 வரையில் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தபோது இந்தியாவிற்கு எண்ணெய் சப்ளை செய்வதை உறுதி செய்வதற்கு எங்களால் முடிந்தவற்றை செய்தோம். ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக சவுதி அரேபியா, ரஷியா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து வாங்க முயற்சி செய்தால் நாங்கள் வழங்கும் சிறப்பு சலுகைகளை இந்தியா இழக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முதலீடு செய்யும் என உறுதியளிக்கப்பட்ட சாபஹார் துறைமுக விரிவாக்கம் மற்றும் அதன் இணைப்பு திட்டங்கள் இதுவரையில் நிறைவேற்றப்பட்டவில்லை இது துரதிஷ்டவசமானது. தேவையான நடவடிகையை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Next Story