ஒரே நாடு ஒரே தேர்தல் மின்னணு வாக்கு எந்திரங்கள் வாங்க மட்டும் ரூ 4,555 கோடி செலவாகும்


ஒரே நாடு ஒரே தேர்தல் மின்னணு வாக்கு எந்திரங்கள் வாங்க மட்டும் ரூ 4,555 கோடி  செலவாகும்
x
தினத்தந்தி 11 July 2018 8:32 AM GMT (Updated: 11 July 2018 8:32 AM GMT)

ஒரே நாடு ஒரே தேர்தல் மின்னணு வாக்கு எந்திரங்கள் வாங்க மட்டும் ரூ 4,555 கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் கணக்கிட்டு உள்ளது.

புதுடெல்லி, 

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார்.

அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் டெல்லியில்,கடந்த 7 ந்தேதி  சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தியது.

ஆனால் இந்த திட்டத்திற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து  தெரிவித்தன. இந்த நிலையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம்,   ஒரே நாடு ஒரே தேர்தல் முன்மொழிவு பற்றிய அரசாங்கத்தின் கேள்விகளுக்கு பதிலளித்து உள்ளது அதில் ஒரே நேரத்தில் தேர்தல்கள் ஒரு உண்மை ஆக இருந்தால். 2034 ஆம் ஆண்டில் (நான்காவது ஒரே நாடு ஒரே தேர்தல் தேர்தலுக்கு) தேவைப்படும் கூடுதல் நிதிகளின் அளவு பட்டியலிடப்பட்டுள்ளது, 

 வாக்குச் சாவடி ஒன்றுக்கு இரண்டு செட் மின்னணு வாக்கு எந்திரங்கள் தேவைப்படும்.

ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் கூடுதலாக பல லட்சம் எந்திரங்கள் வாங்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு கூடுதலாக மின்னணு எந்திரங்கள் வாங்குவதற்கு சுமார் ரூ.4554.93 கோடி தேவைப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதேபோல் தேர்தல் அதிகாரிகளும் அதிக அளவு தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுவாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை 3 தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு புதிய எந்திரங்கள் வாங்க சில ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். மேலும் வரும் ஆண்டுகளில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. எனவே மின்னணு எந்திரங்கள் தேவை அதிகரிக்கும். அதற்கும் கூடுதல் செலவாகும்.

2019 ஆம் ஆண்டிற்கான வாக்குப்பதிவு நிலையங்களில் 14 சதவீதம்  அதிகரிப்பு இருப்பதாக ஆணையம் கூறியுள்ளது, அதே நேரத்தில் 2024 (12,19,000 வாக்குப்பதிவு நிலையங்கள்) 15 சதவீத  அதிகரிக்கும்

2024-ம் ஆண்டு தேர்தலின் போது மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கூடுதலாக 12 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டியதிருக்கும். அப்போது மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வாங்குவதற்கே சுமார் ரூ.14 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story