டெல்லியில் கடை ஒன்றில் கொள்ளையடிக்கும் முன் நடனமாடி மகிழ்ந்த திருடன்


டெல்லியில் கடை ஒன்றில் கொள்ளையடிக்கும் முன் நடனமாடி மகிழ்ந்த திருடன்
x
தினத்தந்தி 12 July 2018 6:15 AM GMT (Updated: 12 July 2018 6:15 AM GMT)

டெல்லியில் கடை ஒன்றில் கொள்ளையடிக்கும் முன்னர் நடனமாடி மகிழ்ந்த திருடனின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடை ஒன்றில் கொள்ளையடிக்கும் முன்னர் நடனமாடியுள்ள திருடனின் வீடியோ காட்சி அங்குள்ள சிசிடிவி காமிரா காட்சியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் திருடன் ஒருவன் தன்னுடைய கூட்டாளிகள் வருவதற்கு தாமதமாகியதால், கொள்ளையடிப்பதற்கு முன்னர் மிகவும் மகிழ்ச்சியுடன் நடனமாடியுள்ளான். பின்னர் தன்னுடன் வந்த மற்றொரு திருடனின் உதவியுடன் கடையின் பூட்டை உடைத்து திருடியும் சென்றுள்ளான்.

சுமார் 22 வினாடிகள் ஓடும் திருடனின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதனிடையே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், போலீசார் திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story