குஜராத்தில் வெள்ளம்: தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது


குஜராத்தில் வெள்ளம்: தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது
x
தினத்தந்தி 12 July 2018 8:17 AM GMT (Updated: 12 July 2018 8:17 AM GMT)

குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தேசிய பேரிடர் மீட்பு குழு குஜராத் விரைந்துள்ளது. #GujaratRain

வதோதரா,

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிரட்டி வரும் கனமழை குஜராத்தையும் விட்டு வைக்கவில்லை. கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு கனழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய கனமழை இன்று காலை 10 வரை வெளுத்து வாங்கியது. நகரெங்கும் வெள்ள நீர் சூழ பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நவ்சாரி மாவட்டத்தில் 176 மி.மீ மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இடைவிடாத மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அவுரங்கா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 1000-த்திற்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தேசிய பேரிடர் மீட்பு குழு குஜராத் விரைந்துள்ளது.

Next Story