தேசிய செய்திகள்

ஜம்மு: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மத்திய ரிசர்வ் படை வீரர் உயிரிழப்பு + "||" + CRPF jawan killed in militant attack

ஜம்மு: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மத்திய ரிசர்வ் படை வீரர் உயிரிழப்பு

ஜம்மு: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மத்திய ரிசர்வ் படை வீரர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மத்திய ரிசர்வ் படை வீரர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். #CRPFKilled
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர் உயிரிழந்தார். மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். 

அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அசாபால் சோவ்க் பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 பேர் வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியில் பதற்றம் நிலவுவதையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள், தப்பியோடிய கும்பலை தேடும் பணியில் தீவிரப்படுத்தியுள்ளனர்.