இந்தியா ’இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும் சசிதரூர் பேச்சுக்கு கொல்கத்தா ஐகோர்ட் நோட்டீஸ்


இந்தியா ’இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும் சசிதரூர் பேச்சுக்கு கொல்கத்தா ஐகோர்ட்    நோட்டீஸ்
x
தினத்தந்தி 14 July 2018 5:56 AM GMT (Updated: 14 July 2018 5:56 AM GMT)

இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என பேசிய சசி தரூருக்கு எதிராக கொல்கத்தா ஐகோர்ட் சமூக வலைதளம் மூலம் நோட்டீஸ் அனுப்ப அனுப்பப்பட்டு உள்ளது. #ShashiTharoor

கொல்கத்தா

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவதாகவும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவரது கருத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சசி தரூரை காங்கிரஸ் கண்டித்தது. பொது மேடைகளில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் தன் கருத்தில் இருந்து பின்வாங்காத சசி தரூர், மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், சசி தரூரின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு  எதிராக கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி, கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சசி தரூரின் கருத்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அரசியலமைப்பை அவமதிப்பதாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்  சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான சட்ட நடைமுறைகள் மட்டுமின்றி அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் முகவரிகளுக்கும் சம்மனை அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக டுவிட்டர் மூலம் சசிதரூருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

Next Story