கிறிஸ்தவ ஆலயங்களில் பாவமன்னிப்பு வழங்குவதற்கு எதிரான மனு தள்ளுபடி: கேரள ஐகோர்ட்டு உத்தரவு


கிறிஸ்தவ ஆலயங்களில் பாவமன்னிப்பு வழங்குவதற்கு எதிரான மனு தள்ளுபடி: கேரள ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Aug 2018 11:30 PM GMT (Updated: 2 Aug 2018 10:15 PM GMT)

கிறிஸ்தவ ஆலயங்களில் பாவமன்னிப்பு வழங்குவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொச்சி, 

கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்களிடம் கிறிஸ்தவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் நடைமுறைக்கு எதிராக சி.எஸ்.சாக்கோ என்பவர் கொச்சியில் உள்ள கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். பாவமன்னிப்பு கேட்பதை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மதசார்பற்ற தேசத்தில் தங்கள் மத நம்பிக்கைகளை பின்பற்றும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றும், மேலும் பாவமன்னிப்பு பெறுவதும், பெறாததும் தனிப்பட்ட நபர்களின் உரிமை என்றும், இந்த விஷயத்தில் யாரும் கட்டாயப்படுத்தப்படுவது இல்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story