பாலியல் வன்கொடுமை பாதிரியார் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுமி திடுக்கிடும் வாக்குமூலம்


பாலியல் வன்கொடுமை பாதிரியார் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுமி திடுக்கிடும் வாக்குமூலம்
x
தினத்தந்தி 3 Aug 2018 9:25 AM GMT (Updated: 3 Aug 2018 10:00 AM GMT)

என்னை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை பாதிரியாரை திருமணம் செய்து வாழ விரும்புகிறேன் என கோர்ட்டில் இளம் பெண் பல்டி அடித்து உள்ளார்.


திருவனந்தபுரம்

கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்து தாயாக்கிய வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுமி திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். 

கண்ணூர் அருகே உள்ள கொட்டியூரில் செயின்ட் செபஸ்டியன் சர்ச்சில் பாதிரியராக பணி புரிந்தவர் ராபின் வடக்கஞ்சேரி (48) இவர் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து தாயாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். கடந்த 2017 பிப்ரவரி 7 ஆம் தேதி சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அதன்பின் சிறுமியை வயநாட்டில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தனர். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த தகவல் கண்ணூர் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினருக்கு தெரியவந்தது.

இதன்மூலம் போலீசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் ராபின் கைது செய்யப்பட்டார். போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பாதிரியார் என்னை மிரட்டியும் பல ஆசை வார்த்தைகளை கூறியும் அடிக்கடி சர்ச்சுக்கு வர வைப்பார். பின்பு, அங்கேயே என்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்தார் என கூறினார்.

இந்நிலையில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான சிறுமி கூறுகையில், நானும் பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரியும் பரஸ்பர சம்மதத்துடன் தான் உறவில் ஈடுபட்டோம். அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. எனது குழந்தைக்கு அவர்தான் தந்தை, பாதிரியார் ராபினை திருமணம் செய்து வாழ விரும்புகிறேன் என கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

போலீசார் விசாரணையின் போது பாலியல் வன்கொடுமை என சொன்ன சிறுமி, நீதிமன்றத்தில் இவ்வாறு கூறியது ஏன் என பல்வேறு தரப்பினரும் குழம்பினர்.இதையடுத்து சிறுமியை பிறழ் சாட்சியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Next Story