“பிரதமர் மோடி இந்தியாவிற்கு கடவுள் அளித்த வரம்” சிவராஜ் சிங் சவுகான் சொல்கிறார்


“பிரதமர் மோடி இந்தியாவிற்கு கடவுள் அளித்த வரம்” சிவராஜ் சிங் சவுகான் சொல்கிறார்
x
தினத்தந்தி 3 Aug 2018 2:56 PM GMT (Updated: 3 Aug 2018 2:56 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு கடவுள் அளித்த வரம் என மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். #PMModi


போபால்,


பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் இவ்வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதாவை எதிர்க்கொள்ளும் விதமாக வியாபம் ஊழல், காங்கிரஸ் விவசாயிகள் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஆங்கில மீடியாவிற்கு பேட்டியளித்து பேசிய முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்த எதிர்ப்பையும் நான் பார்க்கவில்லை. காங்கிரஸ் அரசர்கள் மற்றும் தொழில் அதிபர்களை கொண்ட கட்சியாகும்.

அவர்கள் பொதுமக்களின் பிரச்சனையை பற்றி எதுவும் புரிந்துக்கொள்வது கிடையாது. ஆனால், மாநில மக்கள் என்னை சகோதரனாகவும், குடும்பத்தில் ஒருவராகவும் பார்க்கிறார்கள் என்றார். 

பிரதமர் மோடி குறித்து பேசுகையில், அவர் இந்தியாவிற்கு கடவுள் அளித்த வரம் என்று கூறியுள்ளார் சிவராஜ் சிங் சவுகான்.

"இந்தியாவின் முன்னேற்றம், பொதுமக்களின் அபிவிருத்தி மற்றும் நலனுக்காக அவரைபோன்று பணியாற்றிய ஒருவரை நான் பார்த்தது இல்லை, எங்களுக்கு அவர் சிறந்தவர்,” என கூறியுள்ளார். 


Next Story