மெகுல் சோக்சியை ஒப்படைக்க சி.பி.ஐ. வேண்டுகோள்: ஆன்டிகுவா அரசுக்கு கடிதம் அனுப்பியது


மெகுல் சோக்சியை ஒப்படைக்க சி.பி.ஐ. வேண்டுகோள்: ஆன்டிகுவா அரசுக்கு கடிதம் அனுப்பியது
x
தினத்தந்தி 3 Aug 2018 10:30 PM GMT (Updated: 3 Aug 2018 8:01 PM GMT)

மெகுல் சோக்சியை ஒப்படைக்க வேண்டுகோள் விடுத்து ஆன்டிகுவா அரசுக்கு சிபிஐ கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.

புதுடெல்லி, 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மெகுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டில் பதுங்கி உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு மூலமாக ஆன்டிகுவா அரசுக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை சி.பி.ஐ. அனுப்பி உள்ளது.

அதில், பரஸ்பர இணக்கம் அடிப்படையிலும், ஒரு குற்றவாளி ஒரு நாட்டில் செய்த குற்றம், இன்னொரு நாட்டிலும் குற்றமாக கருதப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், ஊழலுக்கு எதிரான ஐ.நா. பிரகடனத்தில் ஆன்டிகுவா கையெழுத்திட்டு இருப்பதாலும் மெகுல் சோக்சியை நாடு கடத்துமாறு சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்துள்ளது.

Next Story