ஆந்திரா: கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து -15 பேர் பலியான பரிதாபம்


ஆந்திரா: கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து -15 பேர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 4 Aug 2018 2:43 AM GMT (Updated: 4 Aug 2018 2:46 AM GMT)

ஆந்திராவில் உள்ள கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹதி பெல்கல் என்ற இடத்தில் கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரியில் ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். 

கல்குவாரியில் நேற்று இரவு வழக்கமான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது, கற்களை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில், 15 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலியான அனைவரும் ஒடிசாவைச்சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து, தனது வேதனையை பதிவு செய்துள்ள ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, மாவட்ட அதிகாரிகளுடன் பேசியிருப்பதாகவும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சி  தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 


Next Story