தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பு


தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2018 5:16 AM GMT (Updated: 4 Aug 2018 5:16 AM GMT)

தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.

புதுடெல்லி,

கடந்த மூன்று ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், டெல்லியில் மட்டும் கடந்த  2017-2018ல்   எய்ட்ஸ்  அதிகரித்து உள்ளது.

2017-2018 ஆண்டுகளில் 6,563 புதிய நோயாளிகள் டெல்லியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டில் அது 6,340 பேராக இருந்தது.

வெள்ளிக்கிழமை மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இத்தகைய தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவில்  2015-16 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 465 பேரும், 2016-2017 ஆம் ஆண்டில்  1,93,195  பேரும், 2017-2018 ஆம் ஆண்டில் 1,90763 பேரும்  எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்  என கூறப்பட்டு உள்ளது

அதிகரித்து வரும் குடிபெயர்வு காரணமாக,   தலைநகர் டெல்லியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும், புதிய குடியேறியவர்கள் டெல்லியிலுள்ள தற்போதைய மக்களுடன் சேர்க்கப்படுகின்றனர், அவர்களில் பலர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டறியப்படுகின்றது என டெல்லி மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க கூடுதல் திட்ட இயக்குனர் டாக்டர் பர்வீன் குமார் தெரிவித்து உள்ளார்.

எச்.ஐ.வி. உடன் வாழும் மக்கள் தலைநகரில் 28,445 பேர் உள்ளனர். எய்ட்ஸ் நோயால் டெல்லியில் 400 பேர் மரணமடைவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story