விமானப்பயணத்தின் போது விதியை மீறிய நபர் கைது


விமானப்பயணத்தின் போது விதியை மீறிய நபர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2018 11:00 AM GMT (Updated: 4 Aug 2018 11:00 AM GMT)

விமானம் பறந்து கொண்டிருக்கையில் பைலட் அமர்ந்திருக்கும் காக்பிட் பகுதிக்கு செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார். #AirIndia

புதுடெல்லி,

ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.ஐ.138 விமானம் ஒன்று இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரிலிருந்து புதுடெல்லிக்கு நேற்று இரவு கிளம்பியது. இந்நிலையில் விமானம் வானில் பறந்து கொண்டிருக்கையில் பயணி ஒருவர், விமானத்தின் பைலட் அமர்ந்திருக்கும் காக்பிட் பகுதிக்கு செல்ல முயற்சித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட விதிமீறல் நடவடிக்கை காரணமாக விமானப்பயணி கைது செய்யப்பட்டார். பின்னர் விமானமானது திருப்பி மிலனுக்கு சென்றது. மிலனுக்கு வந்தவுடன் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் பெயர் குர்ப்ரீத்சிங் என தெரிய வந்தது. இச்சம்பவத்தால் விமானம் டெல்லி வர சுமார் 3 மணி நேரம் தாமதமானதாக தகவல்கள் வெளியாகின.

விமானிப்பயணியின் ஒழுக்கமில்லாத நடவடிக்கை குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குர்ப்ரீத்சிங் என்னும் நபர் விமானம் வானில் பறந்து கொண்டிருக்கையில் பைலட் அமர்ந்திருக்கும் காக்பிட் பகுதிக்கு செல்ல முயற்சித்துள்ளார். இதனால் அவரை கைது செய்த நிர்வாகம் மிலன் பகுதிக்கு திரும்ப சென்று அங்குள்ள போலீசாரிடம் குர்ப்ரீத்சிங்கை ஒப்படைத்தது. இதனால் ஏ.ஐ.138 விமானம் டெல்லிக்கு செல்ல சுமார் 2 மணி 37 நிமிடங்கள் தாமதமானது எனக் கூறியது.


Next Story