பெப்சி நிறுவன சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுகிறார் இந்திரா நூயி


பெப்சி நிறுவன சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுகிறார் இந்திரா நூயி
x
தினத்தந்தி 6 Aug 2018 11:46 AM GMT (Updated: 6 Aug 2018 12:17 PM GMT)

பெப்சி நிறுவன சிஇஓ பொறுப்பில் இருந்து இந்திரா நூயி அக்டோபர் மாதம் விலகுகிறார் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

உலக அளவில் குளிர்பான விற்பனையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான பெப்சியின் தலைமை செயல் அதிகாரியாக இந்திரா நூயி செயல்பட்டு வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக இப்பொறுப்பில் இருக்கும் இந்திராநூயி அப்பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக பெப்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் அக்டோபர் மாதத்தில், இந்திரா நூயி, சிஇஒ பொறுப்பில் இருந்து விலகுவார் எனவும், பெப்சிகோ நிறுவனத்தின் பிரசிடண்ட் ராமோன் லகுவார்டா, சிஇஒ பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்திரா நூயி, சென்னையில் பிறந்தவர் ஆவார். இந்திராநூயி சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2014-ம் ஆண்டு போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இந்திரா நூயி 13-வது இடத்திலும், 2015-ம் ஆண்டு பார்டியூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் 2-வது இடத்திலும் இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.


Next Story