காலிஸ்தான் பயங்கரவாதிகள் அரசியல்வாதிகளுக்கு எதிராக மிரட்டல்களை விடுக்கிறார்கள் - மத்திய அரசு


காலிஸ்தான் பயங்கரவாதிகள் அரசியல்வாதிகளுக்கு எதிராக மிரட்டல்களை விடுக்கிறார்கள் - மத்திய அரசு
x
தினத்தந்தி 7 Aug 2018 11:23 AM GMT (Updated: 7 Aug 2018 11:23 AM GMT)

காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அரசியல்வாதிகளுக்கு எதிராக மிரட்டல்களை தொடர்ந்து விடுத்து வருகிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி. சுனில் ஜகார் கேள்விக்கு எழுத்துப்பூர்வமான பதிலை மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் அஹிர் வழங்கியுள்ளார்.

வெளிநாட்டை தளமாக கொண்டு செயல்படும் சில காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் செய்திகளை விடுக்கிறது, இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளை மிரட்டி அவ்வப்போது வீடியோக்களை வெளியிடுகிறார்கள் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாடுகள் சரியான நடவடிக்கையை எடுக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story