கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா இந்தியர்கள் தகவலை திருடிய விவகாரம் சிபிஐ விசாரணையை தொடங்கியது


கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா இந்தியர்கள் தகவலை திருடிய விவகாரம் சிபிஐ விசாரணையை தொடங்கியது
x
தினத்தந்தி 8 Aug 2018 12:07 PM GMT (Updated: 8 Aug 2018 12:07 PM GMT)

பேஸ்புக்கில் இருந்து கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா இந்தியர்களின் தகவலை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணையை தொடங்கியது. #CambridgeAnalytica


புதுடெல்லி,

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, தவறாக பயன்படுத்தியது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்தது. 

இதை ‘பேஸ்புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார். 

இந்திய அரசியலிலும் இப்பிரச்சனை புயலை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் பேஸ்புக் நிறுவனத்துக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 
இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக பணியாற்றினோம் 
என கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா விசில் ப்ளோவர் டுவிட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தகவல் திருட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு கூறியது. இப்போது பேஸ்புக்கில் இருந்து கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா இந்தியர்களின் தகவலை திருடியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.


Next Story