குஜராத்தில் எறும்பு ஒன்று வைரத்தை தூக்கி செல்லும் வீடியோ


குஜராத்தில் எறும்பு ஒன்று வைரத்தை தூக்கி செல்லும் வீடியோ
x
தினத்தந்தி 10 Aug 2018 8:44 AM GMT (Updated: 10 Aug 2018 8:44 AM GMT)

குஜராத்தில் எறும்பு ஒன்று வைரத்தை தூக்கி செல்லும் வீடியோ யூடியூபில் வைரலாக பரவி வருகிறது.


விலையுயர்ந்த நகை என்றால் அதனை மனிதன் தான் கொள்ளையடித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது இணையத்தில் பரவும் வீடியோ ஒன்றில் மிகவும் சிறிய அளவில் இருக்கும் எறும்பு தன்னை விட பெரிதாக இருக்கும் வைரத்தை கொண்டு செல்கிறது. எறும்பு சர்க்கரை துண்டு என நினைத்து இந்த வைரத்தை தூக்கி செல்கிறது.  இந்த காணொளி எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் குஜராத் மாநிலம் சூரத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. Next Story