வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: ஒடிசா மாநிலத்திற்கு கனமழை எச்சரிக்கை


வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: ஒடிசா மாநிலத்திற்கு கனமழை எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2018 1:40 PM GMT (Updated: 11 Aug 2018 1:40 PM GMT)

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒடிசா மாநிலத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #OdishaLowPressure

புவனேஷ்வர்,

இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் வங்கக்கடலின் வடமேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் ஒடிசா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரை பகுதியில்  நிலைகொண்டுள்ள காற்று சுழற்சியானது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வடக்கு மற்றும் தெற்கு ஒடிசாவிலுள்ள மல்கான்கிரி, கோராபூட், நவராங்பூர், நூவபாரா, ராய்கடா உள்ளிட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாநில நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Next Story