தேசிய செய்திகள்

தொகுதியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படாது ராகுல் காந்தி அதிரடி + "||" + No Tickets for 'Parachute Candidates' in Rajasthan, Will Cut the Rope Myself Rahul Gandhi

தொகுதியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படாது ராகுல் காந்தி அதிரடி

தொகுதியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படாது ராகுல் காந்தி அதிரடி
தொகுதியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். #RahulGandhi
புதுடெல்லி,

இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று பிரசாரத்தை தொடங்கினார். ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களுடன் விமான நிலையம் முதல் ராம்லீலா மைதானம் வரை சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்ற ராகுல் காந்தி, ஜெய்ப்பூரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். 

இந்தநிலையில் வரும் டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொகுதியில் இல்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படாது என ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசிய பின்னரே அந்த தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.