2019 தேர்தலில் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்று சாதனை படைப்போம் - பிரதமர் மோடி


2019 தேர்தலில் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்று சாதனை படைப்போம் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 12 Aug 2018 11:37 AM GMT (Updated: 12 Aug 2018 11:37 AM GMT)

2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்று சாதனை படைக்கும் என பிரதமர் மோடி உறுதியுடன் கூறியுள்ளார். #PMModi


புதுடெல்லி,

2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய எம்.பி.க்கள் இருந்த போதிலும் பா.ஜனதா வெற்றியை தனதாக்கியது. இது எதிர்க்கட்சிகளில் ஒற்றுமை தொடர்பான கேள்வியை எழுப்புகிறது. இருப்பினும் பா.ஜனதாவிற்கு எதிரான கூட்டணி தொடர்பாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரதமர் மோடி, “கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றியை தனதாக்குவோம். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிகமான தொகுதிகளில் வெற்றிப் பெற்று வரலாற்று சாதனையை படைக்கும். பொதுமக்கள் எங்களுடன் உள்ளார்கள், எங்களுக்கு எந்தஒரு பயமும் கிடையாது. அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் எங்களுடைய அரசு செயல்பட்டு வருகிறது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

Next Story