தேசிய செய்திகள்

வெளிநாடுகளுடன் நேரடி தொடர்பு கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை + "||" + Central government warns state governments

வெளிநாடுகளுடன் நேரடி தொடர்பு கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

வெளிநாடுகளுடன் நேரடி தொடர்பு கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:–

புதுடெல்லி,

சில வெளிநாட்டு பாதுகாப்பு அமைப்புகள், மத்திய உள்துறை அமைச்சகத்தை தவிர்த்து விட்டு, மாநில அரசுகளின் காவல்துறையை நேரடியாக தொடர்பு கொண்டு, கூட்டு பயிற்சி, பரஸ்பர ஒத்துழைப்பு, கருத்து பரிமாற்றம் போன்றவற்றுக்கு அழைப்பு விடுப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது விரும்பத்தக்கது என்றபோதிலும், வெளிநாட்டு அமைப்புகளை தொடர்பு கொள்ளும்போது, தேச பாதுகாப்பு கருதி மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

எனவே, மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தாமல், வெளிநாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் எந்த வேண்டுகோளையும் ஏற்க வேண்டாம் என்று மாநில காவல்துறைக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.