காஷ்மீரில் தீவிரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொலை


காஷ்மீரில் தீவிரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 13 Aug 2018 5:02 AM GMT (Updated: 13 Aug 2018 5:02 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். #Pulwama #CivilianDead

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், புல்வாமா மாவட்டத்தின் முர்ரான் பகுதியிலுள்ள குல்ஷார் அகமத் பாட் என்பவரின் வீட்டில் தீவிரவாதிகள் திடீரென நுழைந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீட்டிலிருந்த அகமத்தை கடத்தி சென்ற தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர் எனக் கூறினார். இந்நிலையில் இன்று காலை குண்டுகள் துழைக்கப்பட்டு இறந்த நிலையில் அகமத்தின் உடல் கிராமப்புறத்திற்கு வெளியே போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இக்கொலை சம்பவத்தில் உள்ளூர் தீவிரவாதிகளான ஷகூர் தோகர் மற்றும் ஷோவ்காட் தார் ஆகியோர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தெற்கு காஷ்மீரில் பொது மக்கள் கடத்தி கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த வருடம் மட்டும் இதுவரை போலீசார் மற்றும் துணைப்படை அதிகாரிகள் உட்பட ஆறு பேர் தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story