கர்நாடகாவில் 50% விவசாய கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு தயாரா? ராகுல் காந்தி கேள்வி


கர்நாடகாவில் 50% விவசாய கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு தயாரா?  ராகுல் காந்தி கேள்வி
x
தினத்தந்தி 13 Aug 2018 9:51 AM GMT (Updated: 13 Aug 2018 10:02 AM GMT)

50% விவசாய கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு தயாரா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.#RahulGandhi

பெங்களூர்,

கர்நாடக சட்டசபை தேர்தலின்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் முடிந்து இங்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.  குமாரசாமி முதல்-மந்திரியாக இருக்கிறார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி பீதர் டவுன் நேரு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:

இந்த மேடையில் பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கிறேன்.   கர்நாடகா அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது .  கர்நாடகாவில் 50% விவசாயக் கடனை  நீங்கள் (மையம்) தள்ளுபடி செய்ய தயாரா? உங்களுக்கு சவால் விடுகிறேன். 56 அங்குல மார்பு இருந்தால், இதை செய்ய நான் உங்களுக்கு தைரியம் தருகிறேன்.  ஆனால் நீங்கள் இதை செய்ய மாட்டீர்கள் எனக்கூறினார். 

மேலும்   ரபேல் விமான விவகாரத்தில் நிர்மலா சீதாராமன்ஜி இளைஞர்களிடம் பொய் கூறுகிறார். இந்தியாவும் பிரான்சும் ரகசிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் அதனை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.  ரபேல் விமானங்கள் ஒப்பந்தங்களில் அவர்கள் மறுத்தால் நான் பிரான்ஸ் அதிபரிடம்  இது குறித்து கேட்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

Next Story