பிளாஸ்டிக் தேசியக்கொடிகளை பயன்படுத்த வேண்டாம்: உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்


பிளாஸ்டிக் தேசியக்கொடிகளை பயன்படுத்த வேண்டாம்: உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 13 Aug 2018 12:47 PM GMT (Updated: 13 Aug 2018 12:47 PM GMT)

சுதந்திர தினத்தில் பிளாஸ்டிக் தேசியக்கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என்று உள்துறை அமைச்சகம் அறிவுத்தியுள்ளது. #72ndIndependenceDay

புதுடெல்லி,

72-வது சுதந்திர தினம்  ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.  இந்தநிலையில் பிளாஸ்டிக் தேசியக்கொடிகளை பயன்படுத்த வேண்டாம்  என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் காகித்தால் செய்யப்பட்ட தேசியக்கொடிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.  சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Next Story