தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்; என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + Kupwara: An encounter has broke out between terrorists and security forces at Guloora area of Handwara. More details awaited. #JammuAndKashmir

ஜம்மு காஷ்மீர்; என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்; என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் குப்வரா பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வரா மாவட்டத்தின் ஹந்த்வரா அருகே உள்ள குலூரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் வேறு ஏதும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என்று பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.