விஜய் மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விவகாரம், சிபிஐக்கு காங்கிரஸ் கேள்வி


விஜய் மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விவகாரம், சிபிஐக்கு காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 14 Sep 2018 12:28 PM GMT (Updated: 14 Sep 2018 12:28 PM GMT)

விஜய் மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்ததில்லை என்று சிபிஐ இப்போது எப்படி கூறலாம் என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது.

இங்கிலாந்து செல்லும் முன்னதாக அருண் ஜெட்லியை சந்தித்தேன் என விஜய் மல்லையா கூறிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் பா.ஜனதாவை இலக்காக்கி வரும் காங்கிரசுக்கு மாற்று ஆயுதமாக சிபிஐயின் அறிக்கை விவகாரம் சிக்கியுள்ளது. அதாவது லுக் அவுட் நோட்டீஸில் கைது செய்யுங்கள் என்பதை தகவல் தெரிவியுங்கள் என மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜய் மல்லையா வெளிநாடு தப்புவதில் பிரதமர் மோடிக்கு நேரடியாக தொடர்புள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இதற்கிடையே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பேசுகையில், “விஜய் மல்லையா தவறிழைத்தவர் என்று எஸ்பிஐ 2014 ஆகஸ்ட் 19-ம் தேதியே நோட்டீஸ் விடுத்தது. 2014 செப்டம்பரில் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவும் இதேபோன்ற அறிக்கையை தெரிவித்தது. 2015-ல் எஸ்எப்ஐஒ மற்றும் சிபிஐ அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இப்போது எப்படி சிபிஐ எங்களிடம் ஆதாரங்கள் இருந்ததில்லை என்று கூறமுடியும்?” என கேள்வியை எழுப்பியுள்ளார்.

 விஜய் மல்லையா வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.

Next Story