மராட்டியத்தில் இன்று பெரிய தீபாவளி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதை உறுதி செய்யுங்கள் - போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு சுற்றறிக்கை


மராட்டியத்தில் இன்று பெரிய தீபாவளி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதை உறுதி செய்யுங்கள் - போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு சுற்றறிக்கை
x
தினத்தந்தி 6 Nov 2018 9:15 PM GMT (Updated: 6 Nov 2018 8:33 PM GMT)

மராட்டியத்தில் இன்று பெரிய தீபாவளி கொண்டாட்டம் காரணமாக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதை உறுதி செய்யுங்கள் என போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மும்பை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மராட்டியத்தில் இன்று (புதன்கிழமை) பெரிய தீபாவளி எனப்படும் லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது.

எனவே இன்று தான் மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்கள். மராட்டியத்தில் இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை பட்டாசு வெடித்து கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே பட்டாசு வெடிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும்படி மாநில டி.ஜி.பி., மண்டல கமிஷனர்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மேலும் சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story