ராஜஸ்தான்: மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு - பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜினாமா


ராஜஸ்தான்: மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு - பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜினாமா
x
தினத்தந்தி 13 Nov 2018 4:55 PM GMT (Updated: 13 Nov 2018 4:55 PM GMT)

மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால். ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் 200 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 7–ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி பா.ஜனதா கட்சி 131 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

பொது சுகாதாரத்துறை மந்திரியும், 5 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்தவருமான சுரேந்திர கோயலுக்கு வருகிற தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகினார்.

அதே போல், நாகவூர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஹபிபூர் ரஹ்மானின் பெயர் புதிய வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக மற்றொரு நபருக்கு அந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஹபிபூர் ரஹ்மான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது டெல்லியில் இருக்கும் அவர் தனது ராஜினாமா கடிதத்தை ‘இ–மெயில்’ மூலம் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் மதன் லால் சைனிக்கு அனுப்பினார்.

Next Story