தேசிய செய்திகள்

ம.பி.யில் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே கடுமையான போட்டி; ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - கருத்துக்கணிப்பு + "||" + Surveys give BJP advantage in tight race in Madhya Pradesh, Chhattisgarh

ம.பி.யில் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே கடுமையான போட்டி; ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - கருத்துக்கணிப்பு

ம.பி.யில் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே கடுமையான போட்டி; ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - கருத்துக்கணிப்பு
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது. 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் இத்தேர்தல்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்த நிலையில் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

ம.பி. கடும் போட்டி

பா.ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 40 சதவிதம் வரையிலான வாக்குகளை பெறும் 102-120 தொகுதிகளில் வெற்றிப்பெறும். காங்கிரஸ் 41 சதவித வாக்குகளை பெறும் 104-122 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியை புறக்கணித்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1-3 தொகுதிகளில் வெற்றிப்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 230 தொகுதிகளில் பா.ஜனதா 126 தொகுதிகளிலும், காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ராஜஸ்தானில் காங்கிரஸ்  

பா.ஜனதா ஆட்சி செய்யும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்புக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 119 முதல் 141 தொகுதிகள் வரையில் வெற்றிப்பெறும் என்றும் பா.ஜனதா 55 முதல் 72 தொகுதிகள் வரையில் வெற்றிப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 105 தொகுதிகளிலும், பா.ஜனதா 85 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஷ்காரில் ஆளும் பா.ஜனதா கட்சியே ஆட்சிக்கு வருகிறது என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று தெலுங்கானாவிலும் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியே வெற்றிப்பெறும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் விவகாரம்: கார்கேவிற்கு எதிர்ப்பு; ஏஜி, சிஏஜிக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன் விடுக்குமா?
ரபேல் விவகாரத்தில் மல்லிகார்ஜூன கார்கேவின் நோக்கத்திற்கு மெஜாரிட்டி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஏஜி, சிஏஜிக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன் விடுக்காமல் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
2. மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரியாக 17 ஆம் தேதி பதவியேற்கிறார் கமல்நாத்
மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரியாக கமல்நாத் 17 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
3. மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரியாக கமல்நாத் தேர்வு இன்று பதவி ஏற்கிறார்
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
4. “எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறேன்,” விரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் -ராகுல் காந்தி
“எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறேன்,” விரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டுள்ளது. முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் எம்.எல்.ஏ.க்கள் ஒப்படைத்து இருக்கிறார்கள்.