விஜய் மல்லையா பற்றி நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது: நிதின் கட்காரி விளக்கம்


விஜய் மல்லையா பற்றி நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது: நிதின் கட்காரி விளக்கம்
x
தினத்தந்தி 15 Dec 2018 2:22 AM GMT (Updated: 15 Dec 2018 2:22 AM GMT)

விஜய் மல்லையா பற்றி நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மும்பை,

விஜய் மல்லையா பற்றி நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  இது குறித்து நிதின் கட்காரி கூறியதாவது:- நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நான் விஜய் மல்லையாவை ஆதரித்துப் பேசவில்லை. 40 ஆண்டுகள் ஒருவர் வங்கிக் கடனை சரியாக செலுத்த முடிந்தாலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் 41-வது ஆண்டில் அவரால் அதை செலுத்த முடியாமல் போகும். மல்லையாவுக்கு அப்படித்தான் ஆனது. தொழிலில் லாபமும் நஷ்டமும் ஏற்றமும் இறக்கமும் வரும் என்றே கூறியிருந்தேன்" என தெரிவித்துள்ளார். 

முன்னதாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்காரி,  ஒரு கடனை அடைக்காததால் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது என பேசி இருந்தார். மேலும், கடந்த 40 வருடமாக விஜய் மல்லையா தான் வாங்கிய கடன்களுக்கான வட்டியை முறையாக கட்டியிருக்கிறார். விமானத்துறைக்குள் நுழைந்ததும்தான் அவர் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். 

இதனால் கடனை அவரால் அடைக்க முடியாமல் போயுள்ளது. இதற்காக அவர் திருடன் ஆகி விடுவாரா.? 50 வருடம் வாங்கிய கடனை எல்லாம் முறையாக அடைக்கும் ஒருவர், ஒரு கடனை மட்டும் அடைக்காமல் போகும்போது அவரை திருடன் என்று கூறுவது நியாயமானதாக இல்லை. வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படத்தான் செய்யும். ஒருவர் கீழே விழும்போது மற்றவர்கள் அவருக்கு உதவ வேண்டும், ஆதரவாக இருக்க வேண்டும்” இவ்வாறு கட்காரி  கூறியிருந்தார். நிதின் கட்காரியின் கருத்து விஜய் மல்லையாவை நியாயப்படுத்தும் வகையில் இருந்ததாக கூறி அரசியல் வட்டாரத்தில் நேற்று சலசலப்பு ஏற்பட்டது. 

Next Story