சுப்ரீம் கோர்ட்டில் ராமஜென்மபூமி பிரச்சினை தொடர்பான வழக்கு 4-ந் தேதி விசாரணை


சுப்ரீம் கோர்ட்டில் ராமஜென்மபூமி பிரச்சினை தொடர்பான வழக்கு 4-ந் தேதி விசாரணை
x
தினத்தந்தி 24 Dec 2018 10:45 PM GMT (Updated: 24 Dec 2018 10:28 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் ராமஜென்மபூமி பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஜனவரி 4–ந் தேதி வருகிறது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு, பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோஹி அக்ஹாரா, ராமர் கோவில் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை 3 நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றினர். ஜனவரி 4–ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.


Next Story