மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் சரிவு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் சரிவு
x
தினத்தந்தி 2 Jan 2019 5:16 AM GMT (Updated: 2 Jan 2019 5:16 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் சரிவுடன் தொடங்கின.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் குறியீடு 198.83 புள்ளிகள் குறைந்து 36,055.74 புள்ளிகளாக காணப்படுகிறது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 61.35 புள்ளிகள் குறைந்து 10,848.75 புள்ளிகளாக காணப்படுகின்றது.

மும்பை பங்கு சந்தையில் எம். அண்டு எம்., எச்.டி.எப்.சி. டுவின்ஸ், கோடக் வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் போன்றவை 2 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கும்பொழுது 27 பைசாக்கள் குறைந்து ரூ.69.70 ஆக உள்ளது.

Next Story