காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் பாதிப்பு


காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் பாதிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2019 6:30 PM GMT (Updated: 12 Feb 2019 6:01 PM GMT)

காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளின் அமளியால், நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள், ரபேல் ஒப்பந்தம் குறித்து கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 20 நிமிடங்கள் அவையை ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையில் நேற்று காலை அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து அந்த கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதனால் அவையை மதியம் 2 மணி வரை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார். 2 மணிக்கு அவை கூடியதும் மீண்டும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2–வது முறையாக 2.35 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டதால் நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார்.

Next Story