‘இந்திய எல்லை பாதுகாப்பாக உள்ளது’ கவிதை நடையில் ராணுவம் டுவிட்டரில் செய்தி


‘இந்திய எல்லை பாதுகாப்பாக உள்ளது’ கவிதை நடையில் ராணுவம் டுவிட்டரில் செய்தி
x
தினத்தந்தி 27 Feb 2019 10:39 PM GMT (Updated: 27 Feb 2019 10:39 PM GMT)

பாகிஸ்தான் எல்லையில் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதால் இரு நாட்டு எல்லை பகுதியிலும் போர் பதட்டம் நிலவுகிறது.

புதுடெல்லி, 

பதட்டத்தை தணிக்கவும், இந்திய வீரர்களை ஊக்குவிக்கவும் ராணுவம் தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ‘புயலை நோக்கி’ என்ற தலைப்பில் கவிதை வடிவில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘புயல் வீசும் நேரத்தில் ஆற்றில் வீசும் கடும் அலையில் படகை நேர்த்தியாக ஓட்டுங்கள். அநீதிக்கு எதிராக, நீதியை நிலைநாட்ட இது நமக்கு தைரியம் அளிக்கும். இந்திய எல்லை பாதுகாப்பாக உள்ளது. இதற்கு காரணமான நமது துணிச்சல் மிகுந்த வீரர்களுக்கு நன்றி. நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்யும் தியாகம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்’’ என கூறப்பட்டு உள்ளது.

இந்த கவிதை நடை செய்தி, இந்திய வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து வெற்றி பெற உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story