தேசிய செய்திகள்

அசாமில் 5 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் + "||" + Congress announced 5 candidates in Assam

அசாமில் 5 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

அசாமில் 5 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்
அசாமில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 5 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.
கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது. டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது. இதில் தற்போதைய எம்.பி.க்களான சுஷ்மிதா தேவ், கவுரவ் கோகாய் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர முன்னாள் மத்திய மந்திரி பபன்சிங் கதோவர், முன்னாள் எம்.எல்.ஏ. சுசந்தா புராகோஹைன், ஸ்வரூப் தாஸ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 5000 கண்காணிப்பு விமானங்கள்
அசாமில் மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 5000 கண்காணிப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
2. ராணுவ வீரரை சட்டவிரோத குடியேறி என்று அறிவித்த விசாரணை அதிகாரிக்கு எதிராக வழக்கு
ராணுவ வீரரை சட்டவிரோத குடியேறி என்று அறிவித்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிக்கு எதிராக வழக்கு
3. அசாமில் இரு பிரிவினர் இடையே மோதல்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
அசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் வெள்ளிக்கிழமை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 15 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
4. 11 மணி நிலவரம்: அசாம்-26.39, சத்தீஷ்கர்- 26.2 சதவீத வாக்குகள் பதிவு
11 மணி நிலவரப்படி அசாமில் 26.39 சதவீத வாக்குகளும், சத்தீஷ்கரில் 26.2 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
5. மாட்டிறைச்சி உணவு விற்பனை: இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேர் கைது
அசாமில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.