தேநீர் குவளையில் பா.ஜனதா கோஷம்: ரெயில்வேக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்


தேநீர் குவளையில் பா.ஜனதா கோஷம்: ரெயில்வேக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
x
தினத்தந்தி 2 April 2019 10:30 PM GMT (Updated: 2 April 2019 9:28 PM GMT)

தேநீர் குவளையில் பா.ஜனதா கோஷம் இடம்பெற்ற விவகாரத்தில், ரெயில்வேக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.

புதுடெல்லி,

சதாப்தி ரெயில் ஒன்றில் தேநீர் வழங்க பயன்படுத்தப்பட்ட குவளையில், பா.ஜனதாவின் தேர்தல் கோஷமான ‘நானும் காவலாளிதான்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த குவளையை வாபஸ் பெற்று விட்டதாகவும், ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து விட்டதாகவும் ரெயில்வே கூறியிருந்தது.

இருப்பினும், இதுதொடர்பாக 4-ந் தேதிக்குள் விளக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு ரெயில்வேக்கு தேர்தல் கமிஷன் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

மேலும், ரெயில் டிக்கெட்டில் பிரதமர் மோடி படம் அச்சிடப்பட்ட விவகாரம் தொடர்பாக ரெயில்வேக்கு தேர்தல் கமிஷன் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் ரெயில்வேயின் செயல்பாடு மெத்தனமாக இருப்பதாக கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், ஏர் இந்தியா விமான டிக்கெட்டில் பிரதமர் மோடி படம் அச்சிடப்பட்டது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளிக்க தவறியதால் அதிருப்தி தெரிவித்து, சிவில் விமான போக்குவரத்து செயலாளருக்கு தேர்தல் கமிஷன் நேற்று கடிதம் எழுதியது.

Next Story