நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்


நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
x
தினத்தந்தி 29 May 2019 6:49 AM GMT (Updated: 29 May 2019 8:15 AM GMT)

நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

பிரிட்டன் தலைநகர் லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் வாங்கியது தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்ஜாமீன் அளித்தது. அப்போது விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்தது.

இந்நிலையில் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரும் அமலாக்கத்துறை மனு குறித்து பதிலளிக்க ராபர்ட் வதேராவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

Next Story