மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்: 4.8 ஆக பதிவு


மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்: 4.8 ஆக பதிவு
x
தினத்தந்தி 20 Jun 2019 4:08 AM GMT (Updated: 20 Jun 2019 4:08 AM GMT)

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது.

மும்பை, 

மராட்டிய மாநிலம் சட்டாரா பகுதியில் இன்று காலை 7.48 மணியளவில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் அதிர்ந்ததாக சிலர் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. 

Next Story