யோகா தினத்தை கிண்டல் செய்த ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை


யோகா தினத்தை கிண்டல் செய்த ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை
x
தினத்தந்தி 21 Jun 2019 2:45 PM GMT (Updated: 21 Jun 2019 2:45 PM GMT)

யோகா தினத்தை கிண்டல் செய்து ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இன்று 5-வது சர்வதேச யோகா தினம் இந்தியாவில் கொண்டாடப்பட்டது. முக்கிய தலைவர்கள், பள்ளி மாணவர்கள், ராணுவ வீரர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்திய ராணுவப்படையில் உள்ள நாய்களும் யோகா செய்யும் காட்சிகள் வெளியானது. இந்த புகைப்படம் பலராலும் பகிரப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாய்ப்படையும், அதன் பயிற்சியாளர்களும் யோகா செய்யும் புகைப்படத்தை ‘புதிய இந்தியா’ என்ற தலைப்புடன் வெளியிட்டார். ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட  அந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. 

இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘‘பிரதமர் தலைமையில் புதிய இந்தியா உருவாகி வரும்போது, ராகுல் காந்தி தலைமையில் ஒரு புதிய காங்கிரஸ் உருவாகி வருகிறது. அவருக்கு வாழ்க்கை என்பதே ஒரு தொடர்ச்சியான நகைச்சுவையாகவும், தனது செல்ல நாய்க்குட்டியை நினைவுபடுத்தும் புகைப்படத்தை வெளியிடும் வாய்ப்பாகவும் இருக்கும் போலிருக்கிறது’’ என்று பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் நளின் கோலி தெரிவித்தார். இதுபோல், ராகுலையும், காங்கிரசையும் கேலி செய்து, ஏராளமானோர் பதில் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். 

Next Story