தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும் - தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல் + "||" + In TamilNadu Omopathic medical colleges should be increased - Thol.Thirumavalavan MP Emphasis

தமிழகத்தில் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும் - தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும் - தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்
தமிழகத்தில் ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும் என மக்களவையில் தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தினார்.
புதுடெல்லி,

மக்களவையில் ஓமியோபதி மத்திய சபை மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு அந்த மசோதாவை ஆதரித்து பேசினார். ஓமியோபதி மத்திய சபை மசோதாவிற்கு தனது ஆதரவை தெரிவித்துக்கொள்வதாகவும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார்.


மேலும் அவர் பேசும்போது, ‘தமிழகத்தில் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகள் மிகக்குறைவாகவே உள்ளன. ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாற்று மருத்துவத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். பொதுவாக மாற்று மருத்துவத்தை மேம்படுத்த அரசு முயற்சி எடுப்பதில்லை. அதனால் மக்கள் அலோபதி மருத்துவத்தையே நம்பி உள்ளனர்.

ஓமியோபதி மருத்துவம் போன்ற மாற்று மருத்துவ முறைகளை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும். ஓமியோபதி மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
2. சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல் அமைச்சர் பழனிசாமி தேசியக்கொடி ஏற்றினார் .
3. தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு 1½ லட்சம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1 லட்சத்து 54 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
4. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. தமிழகம், புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் - சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம்
தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.